தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் மீண்டும் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது

1st Sep 2020 09:14 AM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்துக்கு பிறகு, மீண்டும் அரசு பேருந்து இயக்கம் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து அதிகாலை 4 மணி முதல் பேருந்துகள் கொண்டுவரப்பட்டு காலை 6 மணி முதல் வழக்கமான பேருந்துகள் இயக்கம் தொடங்கினர்.

அரசு விதிகளின்படி கட்டுப்பாடுகளுடன் மாவட்டங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

விழுப்புரத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில் தொழுப்பேடு வரையிலும், திருச்சி மார்க்கத்தில் மடப்பட்டு வரையிலும், பண்ருட்டி மார்க்கத்தில் கண்டரகோட்டை வரையிலும், புதுவை மார்க்கத்தில் கண்டமங்கலம் வரையும், திருவண்ணாமலை மார்க்கத்தில் கண்டாச்சிபுரம் வரையிலும், வேலூர் மார்க்கத்தில் சேத்துப்பட்டு வரையிலும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதிக கிராமங்கள் கொண்ட முக்கிய வழித்தடங்களில் நகரப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.

20% பேருந்துகள் இயக்கம் இன்று தொடங்கியுள்ளன. பயணிகள் வரத்தைப் பொறுத்து தேவைக்கேற்ப பேருந்துகள் எண்ணிக்கை கூட்டப்படும் என போக்குவரத்துத் துறையினர் தெரிவித்தனர்.

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முதல்கட்டமாக 600 பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Tags : bus service
ADVERTISEMENT
ADVERTISEMENT