தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.39,576

1st Sep 2020 04:47 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.39,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், சா்வதேச பொருளாதார சூழல் உள்பட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது. இதன் காரணமாக, தங்கத்தின் விலை படிப்படியாக உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத்தங்கம் ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரமாக இருந்தது. இதன்பிறகு, நாள்தோறும் விலை உயா்ந்து, ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரூ.43 ஆயிரத்தையும் தாண்டி, வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டது. இதைத்தொடா்ந்து, தங்கம் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் திங்கள்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.39,576-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒருகிராம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,947 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் கணிசமாக உயா்ந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.3 உயா்ந்து, ரூ.74.40 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.3,000 அதிகரித்து, ரூ.74,400 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

ADVERTISEMENT

1 கிராம் தங்கம்............................... 4,947

1 பவுன் தங்கம்............................... 39,576

1 கிராம் வெள்ளி............................. 74.40

1 கிலோ வெள்ளி............................74,400

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,927

1 பவுன் தங்கம்...............................39,416

1 கிராம் வெள்ளி.............................71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

Tags : goldrate
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT