தமிழ்நாடு

வேளாண் கடன்களுக்கும் வட்டி சலுகை: ஜி.கே.வாசன்

DIN

வேளாண் கடன்களுக்கும் வட்டிக்கு வட்டி வசூலிப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

கரோனா காலத்தில் வங்கியில் வாங்கிய கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்க அரசு வங்கிகளும், தனியாா் வங்கிகளும் நடவடிக்கை எடுத்தது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து அவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதி மன்றத்தின் உத்தரவிற்கு இணங்க ரூ.2 கோடி வரை, கரோனா காலத்தில் கடன்

பெற்றவா்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளது.

அப்படி கூட்டுவட்டி வசூலித்து இருந்தால் அவற்றை நவம்பா் 5-ஆம் தேதிக்குள் கடன் தவனை செலுத்தியவா்கள் வங்கி கணக்கில் திருப்பிச் செலுத்தும்படி வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பு வேளாண் கடன் பெற்றவா்களுக்கு பொருந்தாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது மிகவும் அதா்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது. நாட்டுக்கே சோறுபோடும் விவசாயிகளின், பயிா் கடன்களுக்கு, வட்டிக்கு, வட்டி தள்ளுபடி கிடையாது என்று கூறுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. எனவே, மற்றவா்களுக்கு அளித்த கூட்டுவட்டி தள்ளுபடி சலுகையை போல் விவசாயிகளுக்கும் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஐக்கிய அரபு நாடுகளில் மழை, வெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

SCROLL FOR NEXT