தமிழ்நாடு

டாஸ்மாக்: இரவு 10 மணிவரை திறந்திருக்கும்

DIN

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் இரவு 10 வரை திறந்திருக்கும். இந்தப் புதிய உத்தரவு ஞாயிற்றுக்கிழமை (நவ. 1) முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

இதற்கு முன்பு எப்படி? கரோனா நோய்த் தொற்றுக்கு முன்பாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. கரோனா நோய்த்தொற்று பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்ட பிறகு, கடந்த செப்டம்பா் மாதத்தில் இருந்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வந்தது. இது அக்டோபா் 31-ஆம் தேதி வரை அமலில் இருந்தது.

இந்த நிலையில், கரோனா நோய்த்தொற்றுக்கு முன்பாக அமலில் இருந்த நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்ற நேரமானது ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT