தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே இறந்த முதியவரை முழங்கால் தண்ணீரில் கொண்டு சென்று அடக்கம்

DIN

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள அக்கரை பாக்கம் கிராமத்தில் இரு பிரிவினரிடையே சுடுகாட்டு பிரச்னை நிலவியதால் இறந்த முதியவரை முழங்கால் தண்ணீரில் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. 

பெரியபாளையம் அருகே அமைந்துள்ள கண்ணிகைபேர் ஊராட்சிக்குட்பட்ட தர்மபுரம் கண்டிகை கிராமத்தில் இன்று காலை நாகையா என்ற ஒரு முதியவர் இறந்துவிட்டார். அவருக்கு வயது 97. இவர் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர். இந்த கிராமத்தில் அருந்ததிய சமூகமும். மற்ற வேறு ஜாதி சமூகமும் சேர்ந்து ஒரே சுடுகாட்டைப் பயன்படுத்தி வந்தனர். 

இந்த நிலையில் இறந்த முதியவரின் உடலை எரிக்கக் கொண்டு செல்லும்போது மழை பெய்து சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஒட்டிய பகுதி முழுவதும் முழங்கால் அளவு தண்ணீர் வந்தது. இதனால் வேறு வழியில் கொண்டு செல்ல முயன்றனர்.

ஆனால் அக்கர பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கள் கிராமத்திற்கு வழியாகக் கொண்டு செல்லக்கூடாது என்றும் தங்கள் கிராமங்களை வரக்கூடாது என்றும் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி இருதரப்பினர் இடையே பேசியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் தண்ணீர் நிறைந்த பழைய பாதை வழியாகவே உடலைக் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. 

சுடுகாட்டில் முழங்கால் அளவு தண்ணீர் இருப்பதற்கு காரணம் ஓடை கால்வாய் முழுவதும் தனிநபர் ஒருவரால் ஆக்கிரமித்து ஏற்பட்டதால் தண்ணீர் செல்ல முடியாமல் சுடுகாட்டை முற்றிலும் சூழ்ந்துள்ளதால் என்று அப்பகுதி கிராம மக்கள் குற்றம் சாட்டினர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் பலமுறை சொல்லியும் எந்த பயனும் இல்லை என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT