தமிழ்நாடு

கூத்தாநல்லூர்: பிரதான சாலையில் பெரும் பள்ளத்தால் பொதுமக்கள் அவதி

DIN

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பராமரிக்கப்படாத பிரதான சாலையில் பெரும் பள்ளத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

கூத்தாநல்லூர் நகராட்சிகுள்பட்ட ஏ.ஆர். சாலை, பழைய நகராட்சி அருகேயுள்ளது காளியம்மன் கோயில். இந்தக் கோயிலின் அருகே, பிரதான சாலையில், பெரும் பள்ளம் உள்ளது. இந்தப் பள்ளம் நீண்ட ஆண்டுகளாக உள்ளது. இச்சாலை வழியாக, காந்தி நகர், மேலத் தெரு, சௌகத்அலி தெரு,கமாலியாத் தெரு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சிக்கு உட்பட்ட தெருக்கள், பாண்டுக்குடி, பண்டு தக்குடி, பழையனூர், புனல்வாசல், வடபாதிமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும், இந்த பிரதான சாலைதான் முக்கியமான சாலையாகும்.

மேலும், பெரியப்பள்ளி,சின்னப் பள்ளி, மேலப்பள்ளி, தைக்கால் பள்ளி உள்ளிட்ட பள்ளி வாயில்கள், அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 10க்கும் மேற்பட்ட தனியார்ப் பள்ளிகள் என 15க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் பிரதான சாலையும் இந்தச் சாலைதான். இச்சாலை வழியாக நாளொன்றுக்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் இச்சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். 

இந்தச் சாலையின் நடுவேயுள்ள பெரும் பள்ளம், நீண்ட காலமாக மூடப்படாமலும், தார்ச் சாலையை செப்பனிடப்படாமலும் உள்ளது. இதனால், இரவு நேரங்களிலும், பகலிலும் இச்சாலை வழியாகச் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து, பெருங்காயம் அடையும் துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகிறது. நகராட்சி நிர்வாகம் உடனே இச்சாலையைக் கவனித்து, பள்ளத்தை மூடி, தார்ச்சாலையாக மாற்றித்தர இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

எஸ்.டி.பி.அய்.கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஹெச்.அப்துல் ராஜிக் கூறியது, 

கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஆர். சாலையில், நீண்ட ஆண்டுகளாக இப்பள்ளம் உள்ளது. பள்ளத்தை மூடப்படாமலும், இச்சாலையை தார் போட்டு புதுப்பிக்காமலும் கேட்பாரற்று உள்ளது. தினமும் இச்சாலை வழியாகத்தான் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகிறார்கள். வாரத்திற்கு 5 பேராவது இப்பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். 

உடனே, நகராட்சி ஆணையர் இச்சாலையை நேரில் பார்வையிட்டு, துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும், செப்பனிடப்படாமல் உள்ள தெருக்களையும் பார்வையிட்டு சாலை போட்டுத்தர வேண்டும். இல்லையென்றால், எஸ்.டி.பி.அய்.கட்சியின் சார்பில், பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT