தமிழ்நாடு

கம்பம் பகுதியில் ரூ.500 கள்ள நோட்டுகள்: வியாபாரிகள் அச்சம்

DIN

தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் வர்த்தக மையமாக நிற்பதால் ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர்.

மருத்துவமனைகள் நகை, பாத்திரக் கடைகள், வாரச்சந்தை  மற்றும் உழவர் சந்தைகளுக்கு கூடலூர், குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி புதுப்பட்டி அனுமந்தன்பட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.

தற்போது தீபாவளி பண்டிகை நாள் நெருங்குவதால் அனைத்து கடைகளில் கூட்டம் அதிகமாகிறது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு சில மர்ம நபர்கள் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை ஜவுளிக்கடை பலசரக்கு கடை உள்ளிட்ட கடைகளில் புழக்கத்தில் விடுகின்றனர். வியாபாரிகள் விற்பனையான பொருள்களின் பணத்தை வங்கியில் செலுத்தச் செல்லும்போது கள்ள நோட்டு என்று கூறி வங்கி அதிகாரிகள் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.

இது குறித்து வர்த்தகர் முருகன் என்பவர் கூறியது,

கடைகளில் கூட்டம் நெரிசலாக இருக்கும் நேரங்களில் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ரூபாய் நோட்டுகளைச் சரிபார்ப்பது கிடையாது. இதனைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் கள்ள 500 ரூபாய் நோட்டைப் புழக்கத்தில் விட்டுச் செல்கின்றனர்.

அந்தநோட்டுகளை வங்கியில் செலுத்தும் போது தான் அவை கள்ளநோட்டு என வங்கி அதிகாரிகள் தெரிவிக்கும்போது தான் தெரியவருகின்றது. மேலும் கள்ளநோட்டுகளை மீண்டும் கொண்டு வந்தால் காவல் நிலையத்தில்  புகார் செய்வோம் என வங்கி அதிகாரிகள் கண்டிக்கின்றனர். இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி  வருகின்றனர். 

எனவே கம்பம் பகுதியில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடும் கும்பலைப் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

SCROLL FOR NEXT