தமிழ்நாடு

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி பலி

31st Oct 2020 02:55 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி இருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). கூலித்தொழிலாளி. இவரது மகன்கள் ரஞ்சித் (12), முருகன்( 12), ஆகிய இருவரும் கண்டமானடி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர்.

சனிக்கிழமை வீட்டிலிருந்த சகோதரர்கள் இருவரும், சக நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஏரியில் குளித்துள்ளனர். அப்போது ஏரியில் குட்டை நீரில் மூழ்கி உள்ளனர். உடன் குளிக்கச் சென்ற சக மாணவர்கள் சத்தம் போட்டதால் உடனே அருகிலிருந்த இளைஞர்கள் விரைந்து வந்து மூழ்கிய இருவரையும் மீட்டனர்.

ADVERTISEMENT

அதற்குள் அவர்கள் இருவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT