தமிழ்நாடு

திருவடிசூலம் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் அன்னாபிஷேகம்

31st Oct 2020 06:15 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் எழுந்தருளியுள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி அன்னாபிஷேகம் சிறப்புப் பூஜைகள் ஊஞ்சல் சேவை சனிக்கிழமை நடைபெற்றது. 

விழாவையொட்டி தாய் சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்புப் பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. இதனையொட்டி அன்னத்தால் அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு அன்னப்பாவாடை உற்சவமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. 

ADVERTISEMENT

விழாவையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயில் ஸ்தாபகர் பு.மதுரை முத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு அம்பாளையும் அன்னப்பாவாடை உற்சவத்தையும் கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT