தமிழ்நாடு

ஈரோடு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்

DIN

சிவனுக்கு ஆண்டு முழுவதும் பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் என 16 வகையான திரவியங்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. 

ஆனால் வருடத்திற்கு ஒருநாள்  அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். இன்று ஐப்பசி பௌர்ணமியையொட்டி ஈரோடு மாநகராட்சி பகுதியில் புகழ்பெற்ற ஈஸ்வரன் கோயிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. 

இதைப்போல் மகிமாலீஸ்வரர் கோவில் கருங்கல்பாளையத்தில் உள்ள சோலிஸ்வரர் கோயில்களில் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடந்தது. மகிமாலீஸ்வரர் கோயிலில் சிவனுக்கு 150 கிலோ அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட்டுச் சென்றனர். 

சிவனுக்கு செய்யப்பட்ட அன்னாபிஷேகம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைப்போல் மாவட்டம் முழுவதும் பவானி அந்தியூர் ,சத்தியமங்கலம் ,கோபி, பெருந்துறை உள்பட பகுதிகளில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

SCROLL FOR NEXT