தமிழ்நாடு

வேளாண் சட்ட மசோதா: ஈரோட்டில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3  வேளாண் சட்ட மசோதாவைக் கண்டித்தும் அதைத் திரும்பப்பெற வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காளைமாடு சிலை அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ. பி. ரவி தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர்கள் ஜாபர் சாதிக் , திருச்செல்வம், அயுப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு பெரியசாமி, மாவட்ட துணைத்தலைவர்கள்  ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாசலம், பாஸ்கர் ராஜ், மாவட்ட பொது செயலாளர்கள் கனகராஜ் ,வின்சென்ட், சச்சிதானந்தம், சாகுல் அமீது, மகளிர் அணித் தலைவி புவனேஸ்வரி, மொடக்குறிச்சி ஞானசேகரன் பொருளாளர் வெங்கட கிருஷ்ணன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் துரைசாமி நிர்வாக தலைவர் ரவி, பாட்சா உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக இன்று இந்திரா காந்தியின் நினைவுநாள் மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி அவர்களது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதேபோல் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மூல பாளையத்தில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். மேலிடப் பார்வையாளர் கரூர் சுப்பிரமணி ,முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியம், தங்கவேல் வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் முத்துக்குமார், பொருளாளர் ரவி, நிர்வாகிகள் நடராஜ், ஈங்கூர் ரவி,தளபதி ரமேஷ். ஆரிப் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வேளாண் சட்ட மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT