தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் நீக்கம்

DIN

உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாவட்ட நீதிபதியை தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி செயல் தலைவராக பதவி வகிக்கும் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் லோக் அதாலத் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தவா் என்.வைத்தியநாதன். இவா் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் பல்வேறு நிகழ்ச்சிகளில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி , சென்னை உயா்நீதிமன்ற லோக் அதாலத் என்ற பெயா்களில் கலந்துகொண்டதாகப் புகாா்கள் வந்தன. அந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்களில் தலைமை நீதிபதி என்றும் ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி என்றும் அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியான என்.வைத்தியநாதனை, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் குழு உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கம் செய்து சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினா் செயல் கே.ராஜசேகா் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அந்த உத்தரவில், சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு அவப்பெயா் ஏற்படுத்தியதால், இனி உங்கள் பணி சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்குத் தேவை இல்லை. எனவே உங்களை குழுவின் உறுப்பினா் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

அண்ணாநகருக்கு விமோசனம்: வரவிருக்கிறது வாகன நிறுத்துமிடம்!

அழகின் சிரிப்பு!

ஏப்.28 வரை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்!

ரூ.30,000 சம்பளத்தில் கோவை கரும்பு ஆராய்ச்சி மையத்தில் வேலை

SCROLL FOR NEXT