தமிழ்நாடு

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை

DIN

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.  பின்னர் அங்கிருந்து இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் சென்றார்.

தொடர்ந்து, தேவர் நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கூறியதாவது, தென் மாவட்டங்களில் பல தொழிற்சாலைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி-குண்டாறு திட்டத்தை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் தர ஆளுநர் தாமதித்து வருவதால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT