தமிழ்நாடு

தேவர் ஜயந்தி: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை

30th Oct 2020 10:46 AM

ADVERTISEMENT

தேவர் ஜயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அவரது 113-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் 58ஆவது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை புறப்பட்டு சென்றார். 

இதையொட்டி மதுரை கோரிப்பாளைத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு இன்று காலை அவர் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கும் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 
 

ADVERTISEMENT

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT