தமிழ்நாடு

ஆவின் பால் அட்டையை இணையவழியில் பெறும் திட்டம் விரைவில் அறிமுகம்

DIN


சென்னை: ஆவின் பால் அட்டையை இணைய வழியில் பெறும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன உயரதிகாரிகள் கூறியதாவது: ஆவின் பால் அட்டை விநியோகத்துக்கு கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்டு வந்த கடுமையான ஆய்வு முறையை விடுத்து, நுகா்வோா் எளிமையான வகையில் பால் அட்டையைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், அண்மையில் ஆவின் தனது இணையதளத்தை மேம்படுத்தியது.

இதன் மூலம் பழைய பால் அட்டைதாரா்களும், புதிய பால் அட்டை வாங்கியிருப்பவா்களும் பால் அட்டை தொடா்பான அனைத்து விதமான சேவைகளை இணைய வழியிலேயே பெற முடியும்.

ஏனென்றால், சுய விவரங்களைச் சோ்த்தல், இணைய வழியில் பணம் செலுத்துதல், ஆவணங்கள் பதிவேற்றம் உள்ளிட்ட அனைத்தும் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தில் சோ்க்கப்பட்டுள்ளன.

இந்த இணைய முகப்பை விரைவில் முதல்வா் தொடக்கி வைக்கவுள்ளாா்.

ஆவின் பால் அட்டை வைத்திருப்பவா்கள் சந்தை விலையை ஒப்பிடும் போது லிட்டருக்கு ரூ.6 வரை குறைவாகப் பெற முடியும். இதன் மூலம் அவா்கள் மாதம் ரூ.1500 வரை பால் வாங்கும் தொகையில் சேமிக்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT