தமிழ்நாடு

கூத்தாநல்லூரில் மீலாது நபி சிறப்புப் பிரார்த்தனை

30th Oct 2020 05:07 PM

ADVERTISEMENT

 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மியாஸ் பள்ளிவாயிலில் மீலாது நபி சிறப்புப் பிரார்த்தனை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, 12 நாட்கள் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. மீலாது நபியை அடுத்து, கூத்தாநல்லூர் நகரம் முழுக்க அனைத்து தெருக்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. 12 நாட்களும் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கப்பட்டது. 12 வது நாளான வியாழக்கிழமை இரவு மியாஸ் பள்ளி வாயில் வளாகத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. மியாஸ் பள்ளி வாயில் இமாம் ஜாஹிர் உசேன் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பிரார்த்தனையில் நபிகள் நாயகத்தின் புகழைப் பாடி, உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா தொற்றிலிருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டி சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டன.

சிறப்புப் பிரார்த்தனையில், சமூக இடைவெளியுடன் பலர் பங்கேற்றனர். இதே போல், பொதக்குடி , அத்திக்கடை, பூதமங்கலம், மரக்கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிரார்த்தனை செய்யப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT