தமிழ்நாடு

விரைவில் மருத்துவக் கலந்தாய்வு தேதி அறிவிப்பு

30th Oct 2020 02:11 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் விரைவில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு  தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும்,  இந்த இட ஒதுக்கீட்டின் மூலமாக தமிழகத்தைச் இருந்த 303 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சி அமைச்சர்கள் வலியுறுத்தியும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால அவகாசம் கோரி வந்தார். 

இந்நிலையில், கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற நோக்கில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று பிறப்பித்தார்.

ADVERTISEMENT

இதன் தொடர்ச்சியாக, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஒப்புதல் வழங்கியுள்ளார். செப்டம்பர் 26-ம் தேதி மத்திய அரசின் சொலிசிடர் ஜெனரலுக்கு ஆளுநர் எழுதிய கடிதத்துக்கு அக்டோபர் 29-ம் தேதி பதில் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், உடனடியாக உள்ஒதுக்கீட்டு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி இன்னும் 4 தினங்களில் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு  தகவல் தெரிவித்துள்ளார். 

மேலும்,  தமிழகத்தைச் இருந்த 303 பேருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Tags : NEET
ADVERTISEMENT
ADVERTISEMENT