தமிழ்நாடு

பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்குத் தளவாடங்கள்: அமைச்சர் பி.தங்கமணி 

30th Oct 2020 04:52 PM

ADVERTISEMENT

 

நாமக்கல் மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.41.44 லட்சம் மதிப்பீட்டில் தளவாட பொருள்களை மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்.

தமிழகத்தில் பட்டுத் தொழில் சிறப்பாக நடைபெற்று வரும் நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. 

நிகழாண்டிற்கான விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார்.

ADVERTISEMENT

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டு, 89 பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூ.41 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் விலையில்லா பட்டுப்புழு வளர்ப்புக்கான தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்கினார்.   

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேலம் பட்டு வளர்ச்சித் துறை மண்டல துணை இயக்குநர் எல்.சந்திரசேகரன், இயக்கக இணை இயக்குநர்(திட்டம்) ப.முருகன், நாமக்கல் பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் த.முத்துப்பாண்டியன் மற்றும் பட்டு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT