தமிழ்நாடு

கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

DIN

கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. 

இதற்காக கடந்த 6 மாதத்திற்கு முன் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கியது.கோவில் முன் மண்டபம் புதிதாகக் கட்டப்பட்டது அதற்கு வண்ணம் தீட்டுதல், உள்ளிட்ட திருப்பணிகள்  ரூ.70 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது. கும்பாபிஷேக விழா கடந்த 3 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு மூன்று  யாக கால பூஜை நடந்தது.

இன்று யாக சாலைகள் வைக்கப்பட்டுத் தீர்க்க கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலைச் சுற்றி வந்தது. அதைத்தொடர்ந்து கோயிலைச் சுற்றி ராஜகோபுரம் மூலவர் கோபுரம் ஆகியவற்றுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர் முருகுசேகர். ஆவின் துணைத்தலைவர் குணசேகர் உள்பட முக்கிய நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்றனர். 

கும்பாபிஷேகம் செய்த புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து 48 நாள்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT