தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் நோய்த் தொற்று இல்லாத கை கழுவும் மையங்கள் அமைப்பு

30th Oct 2020 05:59 PM

ADVERTISEMENT

 

அரசுப் பள்ளிகளில் நோய்த் தொற்று இல்லாத கை கழுவும் மையங்கள் அமைப்பு திறக்கப்பட்டுள்ளது. 

கைகளை கை கழுவிய பின் குழாய்களை மூடும் தீநுண்மியால் நோய்த் தொற்று பரவாமல் முன்மாதிரியாகத் தடுக்கும் வகையில் கால் அழுத்தக் கருவி மூலம் கைகளைச் சுத்தம் செய்துகொள்ளும் வகையில் கை கழுவும் மையங்கள் தொண்டு நிறுவனம் பங்களிப்புடன் திருவள்ளூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் 20 அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கடந்த 2 ஆண்டுகளாக தூய்மை பாரத இயக்க திட்டம் மூலம் தன் சுத்தம், உடல் சுத்தம் மற்றும் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் கரோனா நோய்த் தொற்று நேரத்தில் பெரிதும் உதவியது. அதேபோல், கைகள் மூலம் கழுவிய பின் குழாயினை மூடினால் மீண்டும் தீநுண்கிருமி ஒட்டிக் கொள்ளும் அபாயமும் உள்ளது.

ADVERTISEMENT

இதைத் தடுக்கும் வகையில் முன் மாதிரியாகக் கால் அழுத்த மூலம் கைகழுவி கொள்ளும் மையங்கள் தனியார் அறக்கட்டளை, மும்பாய் தனியார் நிறுவனம் மற்றும் அவ்வை கிராம நலச்சங்கம் ஆகியவை இணைந்து அமைத்துக் கொடுக்கவும் முன்வந்தது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் 20 அரசுப் பள்ளிகளில் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளது. இதில், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தூர் கண்டிகை, பூந்தமல்லி ஒன்றியம் நசரத்பேட்டை ஆகிய அரசு நடுநிலைப்பள்ளிகளில் முதல் கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கைகளைப் பயன்படுத்தாமல் கால் அழுத்தம் மூலம் கை கழுவும் கொள்ளும் மையங்களைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் கிரிஜா, தேவநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். 

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இதில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் நந்தகுமார் பங்கேற்று மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்குத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவ்வை கிராம நலச் சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய கவுன்சிலர் சங்கர், ஊராட்சி தலைவர் பொன்.முருகன், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நசரேத்பேட்டை பள்ளி தலைமையாசிரியர் அனுராதா, வெங்கதுர் கண்டிகை அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இசக்கியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT