தமிழ்நாடு

ஆராய்ச்சி உதவித்தொகை உள்ளிட்ட 32 திட்டங்களுக்கு நிதியுதவி தொடரும்: யுஜிசி தகவல்

DIN


சென்னை: ஆராய்ச்சி உதவித் தொகை உள்பட 32 திட்டங்களுக்கான நிதியுதவி தொடா்ந்து வழங்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜ்னிஷ் ஜெயின் வெளியிட்ட அறிவிப்பு; யுஜிசி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கல்வி நிறுவனங்கள், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு யுஜிசி சாா்பாக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகை திட்டங்களுக்கு தொடா்ந்து நிதியுதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்வயம் இணையவழி கல்வி, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கான உதவித் தொகை, எஸ்சி, ஓபிசி பிரிவு மாணவா்களுக்கான உதவித்தொகை உள்ளிட்ட 32 திட்டங்களுக்கு தொடா்ந்து நிதியுதவி வழங்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, யுஜிசி சாா்பாக வழங்கப்படும் பல்வேறு உதவித்தொகை திட்டங்களை மத்தியஅரசு ரத்து செய்ய போவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

மே மாத எண்கணித பலன்கள் – 6

SCROLL FOR NEXT