தமிழ்நாடு

விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்குப் பாராட்டு

30th Oct 2020 04:08 PM

ADVERTISEMENT

 

விழுப்புரத்தில் இளைஞர் தவறவிட்ட ஒரு லட்சம் பணம் மற்றும் நகை இருந்த கைப்பையைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு, காவல்துறையினர் பாராட்டினர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நங்காத்தூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(28). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவர் அண்மையில் ஊருக்கு வந்துள்ளார். வியாழக்கிழமை திருச்சியிலிருந்து ஊருக்கு வந்த அவர் விழுப்புரத்தில் பேருந்தில் சென்றபோது தனது கைப்பையைத் தவறவிட்டார்.

அதில் ரூபாய் ஒரு லட்சம் பணம், அரை பவுன் தங்க மோதிரம், பாஸ்போர்ட், ஒரு செல்பேசி ஆகியவை இருந்தது. இந்த நிலையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த பெரியார்(50), என்பவர் விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவில் அருகே இந்த பையைக் கண்டெடுத்து அதிலிருந்து செல்போன் மூலம், முகவரியில் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அந்த பையை ஒப்படைத்தார்.

ADVERTISEMENT

விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் காவல்துறையினர் பெரியாரை பாராட்டினர். பணத்தைத் தவற விட்ட தமிழ்ச்செல்வனை அழைத்து ஒப்படைத்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT