தமிழ்நாடு

கூடுவாஞ்சேரியில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: நண்பர் கைது

29th Oct 2020 04:55 PM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை செய்த நண்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே மீன்மார்க்கெட் எதிரே திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் பிரியா நகர்ப் பகுதியைச் சேர்ந்த ஞானதாஸ் (வயது 28) இவர் மீன்வளத்துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் அவரது நண்பர் பிரபாகரன் (வயது 27) உள்பட மூவரும் சேந்து திரெளபதி அம்மன் கோயில் வளாகத்தில் மது அருந்தியுள்ளனர். 

அப்போது மூன்று பேருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிப்போய் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் போது பிரபாகரன் ஆத்திரத்தில் பீர் பாட்டிலை உடைத்து ஞானதாஸின் கழுத்தில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். 

ADVERTISEMENT

அங்குள்ள நபர் ஒருவர் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்திற்குக் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி  காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களைச் சேகரித்தனர். 

இக்கொலைச் சம்பவத்தின் கொலையாளியை வண்டலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் கூடுவாஞ்சேரி ஆய்வாளர் அசோகன் உள்ளிட்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற பிரபாகரனை வியாழக்கிழமை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

காவல்துறையினரின் விசாரணையில் பிரபாகரன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஞானதாஸ் தன் வீட்டில் தன்னை தாக்கிவிட்டுச் சென்றதாகவும் அதனால் அவனைப் பழிவாங்கக் காத்திருந்த நான் ஞானதாஸிடம் ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் நட்பு ஏற்படுத்திக் கொண்டேன். பழிவாங்கும் நோக்கத்தில் பழகி அன்றாடம் மது அருந்தி வந்தோம். 

வழக்கம் போல் மது அருந்திக் கொண்டிருக்கும் போது தகராறு ஏற்பட்டது. அப்போது ஞானத்தால் என் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாகக் கூறியதை அடுத்து ஆத்திரம் அடைந்த நான் பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்ததாக ஒப்புக் கொண்டதை அடுத்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT