தமிழ்நாடு

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஒரு நாளில் அதிகளவு நிலக்கரியை கையாண்டு புதிய சாதனை

29th Oct 2020 05:39 PM

ADVERTISEMENT

 

சென்னை: செப்டம்பர் 29, 2020 வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் கப்பல் சரக்கு தளம் 9-ல் அக்டோபர் 27-ம் தேதி எம்.வி.ஓசன் டீரீம் என்ற கப்பலிலிருந்து 56.687 டன் நிலக்கரியை 24 மணி நேரத்தில் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது. 

இச்சாதனையானது இதற்கு முந்தைய சாதனையான 19.06.2020 அன்று கப்பல் சரக்கு தளம் 9-ல் எம்.வி.மைசிர்னி என்ற கப்பலிலிருந்து 24 மணி நேரத்தில் கையாளப்பட்ட அளவான 57.785 டன் நிலக்கரியை விட அதிகமாகும்.

ஹாங்காங் கொடியுடன் வந்துள்ள எம்.வி.ஓசன் டீரீம் கப்பல், இந்தோனேஷியா நாட்டிலுள்ள அதாங் பே என்ற துறைமுகத்திலிருந்து 77,535 டன் நிலக்கரியை வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு எடுத்து வந்துள்ளது. 

ADVERTISEMENT

இக்கப்பலில் வந்த 77,535 டன் நிலக்கரியும் இந்தியா கோக் அன் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இக்கப்பலிலிருந்து நிலக்கரியை இம்கோலா கிரேன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் இயக்கப்படும் மூன்று நகரும் பளுதூக்கி இயந்திரங்களால் 24 மணி நேரத்தில் 56,687 டன் நிலக்கரியை கையாண்டுள்ளது குறிப்பித்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT