தமிழ்நாடு

முக்தி அடைந்தார் சுவாமி திவ்யானந்த மஹராஜ்

29th Oct 2020 03:52 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திருச்சி மாவட்டம், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உப தலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் (86) செவ்வாய்க்கிழமை இரவு முக்தி அடைந்தார்.
மேலும் இவர் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி பரத்வாஜ ஆசிரமம், ஸ்ரீ ராமகிருஷ்ண சிறுவர் காப்பகங்களின் பொறுப்பாளர், திசையன்விளை, உடன்குடி, ராணிப்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ண பள்ளிகளின் செயலர், மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் செயலர் ஆகிய பதவிகளையும் வகித்தவர்.
திருப்பராய்த்துறையில் புதன்கிழமை மாலை நடைபெற்ற திவ்யானந்த மஹராஜின் இறுதிச் சடங்கில் திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத் தலைவர் சுவாமி சுத்தானந்தர், செயலர் சுவாமி சத்யானந்தர், தபோவன சாதுக்கள், அம்பாக்கள், பொதுக் குழு உறுப்பினர்கள், நிர்வாக அதிகாரிகள், ராமகிருஷ்ண பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெல் நிறுவன அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர். நிகழ்வில் திருவாசகப் பாடல்கள் மற்றும் அம்பிகையின் ஆயிரம் திருநாமங்கள் ஓதப்பட்டு, தபோவன வளாகத்தில் உள்ள சுவாமி சித்பவானந்தர் சமாதியருகே, திவ்யானந்த மஹராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. தொடர்புக்கு: 94436-34025. 
முதல்வர் இரங்கல்: ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் திவ்யானந்த மகராஜ் சுவாமிகள் இறைப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவரை இழந்து வாடும் சிஷ்யர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT