தமிழ்நாடு

கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு கட்டாயம்: நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டம்

29th Oct 2020 11:05 AM

ADVERTISEMENT


சென்னை: கல்லூரிகளில் இறுதிப் பருவத் தேர்வு கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இறுதி செமஸ்டர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களை முந்தைய தேர்வில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று யுஜிசி தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க.. ரஜினி பெயரில் பரவிய போலி அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

இறுதி பருவத் தேர்வுகள் நடத்த வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாகக் கூறியுள்ளது. மேலும், செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி பருவத் தேர்வு நடத்த இயலாவிட்டால் கால அவகாசத்தை நீட்டிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளதோடு, இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்துவதை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

ADVERTISEMENT

அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் யுஜிசி தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : UGC Semester exam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT