தமிழ்நாடு

எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் பொறுப்பேற்பு

29th Oct 2020 02:32 AM

ADVERTISEMENT

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் அதிஷ்டானத்தில், கேரள மாநிலம் எடநீர் மடத்தின் தலைவராக சச்சிதானந்த பாரதி சுவாமிகள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேரள மாநிலம், எடநீர் மடாதிபதியாக இருந்த கேசவானந்த பாரதி சுவாமிகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி சித்தி அடைந்தார். இளமைக் காலத்திலிருந்தே அவர் காஞ்சிபுரம் சங்கர மடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். 

கேசவானந்த பாரதி சுவாமிகள் எடநீர் மடத்துக்கும், தேசிய அளவில் மக்களுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும், பங்களிப்புகளும் மகத்தானவை என விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறினார். கேசவானந்த பாரதி சுவாமிகள் தனது வாழ்நாளின்போதே ஜயராம மஞ்சத்தாயாவை வாரிசாக நியமிக்க விரும்பியதையும், அவருக்கு சந்நியாச ஆஸ்ரம உபதேசம் வழங்குவதற்கான நாளைத் தேர்ந்தெடுத்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.  தனது பக்தர்களிடமும், ஜயராம மஞ்சத்தாயாவிடமும் தனக்கு ஒருவேளை எதிர்பாராத சூழ்நிலை ஏற்படுமானால் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளை அணுகி, அவரது ஆசி மற்றும் வழிகாட்டுதலைப் பெற்று, சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வைத்து, எடநீர் மடத்தின் வாரிசாக நியமிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, எடநீர் மடத்தின் நிர்வாகிகள், பக்தர்களுடன் ஜயராம மஞ்சத்தாயாவும் காஞ்சிபுரம் வந்து பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்தனர். எடநீர் மடத்தின் வாரிசாகவும், ஜயராம மஞ்சத்தாயாவுக்கு சந்நியாஸ ஆஸ்ரம உபதேசம் வழங்க வேண்டும் என்ற விருப்பக் கடிதங்களை வழங்கினர். 

ADVERTISEMENT

காஞ்சி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நல்லாசிகளுடன் ஓரிக்கையில் அமைந்துள்ள காஞ்சி மகா பெரியவர் அதிஷ்டானத்தில் எடநீர் மடத்தின் தலைவராக ஜயராம மஞ்சத்தாயா கடந்த 19-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ஜயராம மஞ்சத்தாயாவுக்கு எடநீர் மடத்தின் சம்பிரதாயப்படி, சச்சிதானந்த பாரதி சுவாமிகள் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT