தமிழ்நாடு

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்தேக்கங்களிலிருந்து நீர் திறக்க முதல்வர் உத்தரவு

29th Oct 2020 04:33 PM

ADVERTISEMENT

 

சென்னை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்தேக்கங்களிலிருந்து பிசான பருவ சாகுபடிக்கு 151 நாள்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், தாமிரபரணி ஆற்றில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 4 கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய் , தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகியவைகளின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து, 1.11.2020 முதல் 31.3.2021 வரை 151  நாள்களுக்கு 14351.67 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.

ADVERTISEMENT

மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : water release tamilnadu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT