தமிழ்நாடு

22 இடங்களில் வருமான வரித் துறை சோதனை: கணக்கில் வராத ரூ.150 கோடி கண்டுபிடிப்பு

29th Oct 2020 04:43 PM

ADVERTISEMENT

 

சென்னை : கோயம்புத்தூர், ஈரோடு, சென்னை மற்றும் நாமக்கல்லில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் ஒரு குழுமம் மற்றும் கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் உள்பட அதனுடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான 22 இடங்களில் நேற்று வருமான வரித் துறை சோதனை நடத்தியது.

மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டணங்கள் முறையாக கணக்கில் காட்டப்படவில்லை என்ற தகவலின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

சோதனையில் கைப்பற்ற ஆதாரங்கள் வாயிலாக, கட்டணங்கள் முறையாக கணக்குக் காட்டப்படவில்லை என்பதும், கணக்கில் வராத பணம் அறங்காவலர்களின் தனிப்பட்ட கணக்குகளில் செலுத்தப்பட்டு, பின்னர் நிறுவனம் ஒன்றின் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. நிறுவனத்தின் இதர பங்குதாரர்களான திருப்பூரை சேர்ந்த கட்டடக்கலை வல்லுநர் ஒருவரும், ஜவுளி வியாபாரி ஒருவரும் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர்.  சோதனையின் போது கைப்பற்றப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

நாமக்கல்லை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர்களிடம் நடத்தப்பட்ட சோதனைகளைப் பொறுத்த வரையில், தொழிலாளர்களுக்கான கட்டணங்கள், பொருட்கள் கொள்முதல் உள்ளிட்டவற்றன் விலைகளை உயர்த்திக் காட்டப்பட்ட போலி செலவுகள் கண்டறியப்பட்டன.

சுமார் ரூ 150 கோடி மதிப்புடைய கணக்கில் வராத முதலீடுகளும், செலவுகளும் இந்த சோதனையின் போது கண்டறியப்பட்டன. ரூ 5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சில பாதுகாப்பு பெட்டகங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. சோதனை தொடர்ந்து நடைபெறுகிறது.
 

Tags : income tax Search
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT