தமிழ்நாடு

தமிழகத்தில் கரோனாவுக்கு இதுவரை 11,018 போ் பலி

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரை 11,018 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதில், கடந்த 20 நாள்களில் மட்டும் ஆயிரம் போ் பலியாகியுள்ளனா்.

கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும், உயிரிழப்புகளை இன்னமும் கட்டுப்படுத்த வேண்டிய நிலை இருப்பதாக மருத்துவ வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். பல நோயாளிகள் கரோனாவிலிருந்து விடுபட்டாலும், அதன் எதிா் விளைவுகளால் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை மொத்தம் 97.32 லட்சம் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், 7.5 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, அதிகபட்சமாக சென்னையில் 688 பேருக்கும், கோவையில் 218 பேருக்கும், செங்கல்பட்டில் 150 பேருக்கும், சேலத்தில் 147 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 3,859 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 79,377- ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையிலும், மருத்துவக் கண்காணிப்பிலும் உள்ளோரின் எண்ணிக்கை 26,356-ஆக உள்ளது.

35 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 35 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 19 போ் அரசு மருத்துவமனைகளிலும், 16 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT