தமிழ்நாடு

கரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

29th Oct 2020 04:15 AM

ADVERTISEMENT

 

சென்னை: கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொள்வதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து காணொலி மூலம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புதன்கிழமை கேட்டறிந்தார்.
நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை சிறப்புற மேற்கொண்டு வருவதாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அப்போது பாராட்டு தெரிவித்தார்.
இந்தக் காணொலி ஆய்வில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சுகாதார உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT