தமிழ்நாடு

மழைக்காலம்: சென்னை மாநகராட்சியின் அவசர உதவி எண்கள் வெளியீடு

29th Oct 2020 12:50 PM

ADVERTISEMENT

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. சென்னையில் பரவலாக பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது.

மழை மற்றும் அது தொடர்பான அவசர உதவிக்கு சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.

பருவமழை கால உதவி எண்கள் 
044 2538 4530, 044 2538 4540, 1913 (24*7) 
வடகிழக்கு பருவமழை மூலம் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க, பெருநகர சென்னை மாநகராட்சியின் அவசர உதவி எண்களை தொடர்பு கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் நள்ளிரவு முதலே இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. காலையிலும் மழை நீடித்ததால், முக்கியச் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது, தாழ்வான சுரங்கப்பாதைகளில் மழைநீர் சூழ்ந்துகொண்டதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். 

சென்னை மாநகராட்சி ஊழியர்களின் துரித நடவடிக்கை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் அதிகபட்சமாக டிஜிபி அலுவலகத்தில் 17 செ.மீ. மழையும், புரசைவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும் பதிவானது. சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

தமிழகம் மற்றும் கேரளத்தில் நேற்று வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், சென்னையில் மட்டும் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 87 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
 

Tags : chennai corporation Rain update chennai update
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT