தமிழ்நாடு

மருத்துவப் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

29th Oct 2020 06:44 PM

ADVERTISEMENT

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு அளிக்கக் கோரும் தமிழக அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவா்களில் ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெறுவோருக்கு, மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதா, தமிழக சட்டப் பேரவையில் செப்டம்பா் 15-இல் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா, தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவிற்கு கடந்த 45 நாள்களாக ஆளுநர் ஒப்புதல் தராத நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க தனக்கு 3 முதல் 4 வார கால அவகாசம் தேவை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை அடிப்படையாகக் கொண்டு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு வியாழக்கிழமை அரசாணை வெளியிட்டது.

ADVERTISEMENT

Tags : Reservation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT