தமிழ்நாடு

சேலம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

28th Oct 2020 11:00 AM

ADVERTISEMENT

சேலம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பெண் பலியாகியுள்ளார். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்துள்ள ஊனத்தூர் ஊராட்சி மேற்கு காட்டுக்கொட்டாயில் கலியன் மனைவி பெரியம்மாள்(60) குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

மண்சுவர்களால் ஆனது.அவரது மகன் அருகில் உள்ள அட்டை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு பெய்த கனமழையால் மண்சுவர் நன்றாக ஊறி இருந்துள்ளது. புதன்கிழமை அதிகாலை சுவர் இடிந்து விழுந்ததில் பெரியம்மாள் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளார்.

இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் கொடுத்த தகவலின் பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளர் கே .குமரவேல் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து பெரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT