தமிழ்நாடு

மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

28th Oct 2020 02:58 PM

ADVERTISEMENT

 

பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகளை அளிப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தற்போது மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, இன்று காலை காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பிறகு மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவது, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அதேசமயம், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியன தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மருத்துவ நிபுணா்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி விவாதிப்பாா் எனத் தெரிகிறது.

மேலும், பண்டிகைக் காலங்களில் பொது மக்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வதை வலியுறுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசித்திருப்பார். பண்டிகைக் காலங்களுக்கு முன்பாக தளா்வுகளை அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என்பதால் இன்று நடைபெறும் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT