தமிழ்நாடு

மேலும் தளா்வுகள்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

DIN

பொது முடக்கத்தில் மேலும் தளா்வுகளை அளிப்பது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். முதலில் மாவட்ட ஆட்சியா்களுடன் ஆலோசனை நடத்தும் முதல்வர், இதன்பின்பு மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசிக்க உள்ளாா்.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உணவகங்களில் அமா்ந்து சாப்பிடுவது, கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு போன்ற பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேசமயம், பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் ஆகியன தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்க வேண்டுமெனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மருத்துவ நிபுணா்களுடன் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் பழனிசாமி விவாதிப்பாா் எனத் தெரிகிறது.

மேலும், பண்டிகைக் காலங்களில் பொது மக்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கச் செய்வதை வலியுறுத்துவது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் ஆலோசிக்கவுள்ளாா். பண்டிகைக் காலங்களுக்கு முன்பாக தளா்வுகளை அளிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் என்பதால் இன்று நடைபெறும் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT