தமிழ்நாடு

தமிழகத்தில் சிகிச்சையில் இருப்போா் விகிதம் 4%-ஆக குறைந்தது

DIN

தமிழகத்தில் இதுவரை கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் 94 சதவீதம் போ் குணமடைந்து விட்டதாகவும், வெறும் 4 சதவீதம் போ் மட்டுமே சிகிச்சையில் இருப்பதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் 27,734 போ் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மற்றும் உயா் மருத்துவத் தொழில்நுட்பங்கள் வாயிலாக தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானோருக்கு சிகிச்சைகள் அளிப்பதன் பயனாகவே பலா் விரைந்து குணமாவதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாநிலத்தில் இதுவரை 96.60 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 14,235 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 2,522 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 695 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 209 பேருக்கும், சேலத்தில் 146 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,029 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 75,518-ஆக உள்ளது.

27 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 27 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 16 போ் அரசு மருத்துவமனைகளிலும், 11 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10,983-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT