தமிழ்நாடு

தமிழகம், கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது

28th Oct 2020 12:41 PM

ADVERTISEMENT

 

தமிழகம் மற்றும் கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், 

தமிழகம் மற்றும் கேரளத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் சராசரி அளவையொட்டி வடகிழக்கு பருவமழை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவு 44 செ.மீ ஆகும். ஆனால், இந்தாண்டு மழை அளவு சராசரியை ஒட்டியோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தென்மேற்குப் பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது. 

அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நெல்லை, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்

மேலூர் ARG 6 செ.மீ மழையும், மானாமதுரை, திருபுவனம் தலா 5 செ.மீ மழையும், ராமேஸ்வரம் 4 செ.மீ மழையும், மண்டபம் 3 செ.மீ மழையும், இரணியல், செய்யூர், ராஜபாளையம், பண்ருட்டி, மேலூர், வீரபாண்டி தலா 2 செ.மீ மழையும் பெய்துள்ளது.

Tags : Rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT