தமிழ்நாடு

காலமானார்: சுவாமி திவ்யானந்த மஹராஜ் 

28th Oct 2020 08:11 AM

ADVERTISEMENT

திருச்சி: திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர் சுவாமி திவ்யானந்த மஹராஜ் (86) செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். 

இவர், திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பரத்வாஜ ஆசிரமம், ஸ்ரீ ராமகிருஷ்ண சிறுவர் காப்பக  பொறுப்பாளராக பதவி வகித்தவர். திசையன்விளை, உடன்குடி, ராணிப்பேட்டை ராமகிருஷ்ண பள்ளிகளில் செயலராகவும் இருந்தார். 

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் செயலராகவும் பதவி வகித்தவர். அன்னாரது இறுதிச் சடங்கு இன்று மாலை திருப்பராய்த்துறையில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 9443634025.
 

Tags : obit
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT