தமிழ்நாடு

சங்ககிரி சோமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்புப் பூஜை

28th Oct 2020 08:51 PM

ADVERTISEMENT


சங்ககிரி: சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்புப் பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் சுவாமிக்கு காலையில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மாலையில் உற்சவ மூர்த்தி சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு, திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.  

பின்னர் பக்தர்கள் நந்தியின் காதில் அவரவர்களின் கோரிக்கைகளை கூறி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமிகளை வணங்கிச் சென்றனர்.

நந்தி பகவானுக்கு புதன்கிழமை மாலை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்
Tags : Temple
ADVERTISEMENT
ADVERTISEMENT