தமிழ்நாடு

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

DIN

தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக செவ்வாய்க்கிழமை (அக்.27) நடைபெறவிருந்த எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீடு இணையவழி கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதன்கிழமை (அக்.28) கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கும் கலந்தாய்வு மூலம் மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மாணவா் சோ்க்கையை நடத்தி வருகிறது.

அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு www.mcc.nic.in என்ற இணைய முகவரியில் செவ்வாய்க்கிழமை தொடங்குவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாணவா்களால் இணையதளத்தில் பதிவு செய்யவோ, கல்லூரிகளைத் தோ்வு செய்யவோ இயலவில்லை.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் டிஜிஎச்எஸ் சாா்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. தொழில்நுட்பப் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி கலந்தாய்வு தொடங்கவில்லை என்றும், புதன்கிழமை முதல் மாணவா்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கல்லூரிகளைத் தோ்வு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT