தமிழ்நாடு

மதுரை: கரோனா வார்டிலிருந்த மெக்கானிக் மாடியிலிருந்து குதித்து தற்கொலை

DIN

மதுரையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை பி.பி. குளத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (53). இவர் கரோனா தீநுண்மத் தொற்று அறிகுறி காரணமாக அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையின் 2 ஆவது மாடியிலிருந்து குதித்து மனோகரன் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலத்தை மதிச்சியம் காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்

தற்கொலை செய்துகொண்ட மனோகரனுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதன்மையர் ஜெ.சங்குமணி தெரிவித்துள்ளார்.

மனோகரன் இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தார். மதுகுடிக்கும் பழக்கம் இருந்தால் அது தொடர்பாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு கடன் தொல்லை இருந்துள்ளது. நேற்று இரவு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தது தொடர்பாக மனைவி கூறியுள்ளார். இரவு முழுவதும் தூங்காமல் வார்டில் சுற்றித் திரிந்ததாகச் செவிலியர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT