தமிழ்நாடு

திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை 

28th Oct 2020 05:23 PM

ADVERTISEMENT

 

கோவை திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். 

கோவை மாநகர் திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏ ஆறுக்குட்டியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

கோவை மாவட்ட திமுகவில் முக்கிய நபராக இருந்து வரும் இவரது வீட்டில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக இச்சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமது வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெறுவது குறித்த தகவலறிந்து பையா கவுண்டர் ஈரோட்டிலிருந்து கோவைக்கு விரைந்து வந்தார். அவருடன் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்களும் கிருஷ்ணன் வீட்டின் முன்பு குவிந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது. 

சில மாதங்களுக்கு முன்பு தான் கிருஷ்ணனுக்கு திமுக பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இச்சோதனை நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT