தமிழ்நாடு

செங்கல்பட்டில் தசரா திருவிழா நிறைவு

DIN

செங்கல்பட்டில் தசரா திருவிழா இந்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக தசரா திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறும், திருவிழாவின் 11ஆம் நாள் மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் சாமிகள் அலங்காரத்தில் வீற்றிருக்க வன்னி மரம் குத்தி சாமி ஊர்வலம் பல்வேறு கோயில்கள் பல்வேறு விழா குழுவின் சார்பில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட சாமிகள் ஊர்வலத்தில் வரிசையாகச் செல்லும்.

உள்ளூர் வெளியூர் மக்கள் சாதி மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் குழந்தைகளுடன் வந்து தசரா திருவிழா கண்டும் திருவிழா கடைகளில் பொருள்கள் வாங்கியும் கேளிக்கை நிகழ்ச்சி கோளில் விளையாடியும் மகிழ்ச்சியாக நடைபெறும். 

ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்றைத் தடுக்கும் பொருட்டு திருவிழா கடைகள், ராட்டினங்கள் உள்ளிட்ட கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் சாமிகள் ஊர்வலத்திற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்காததால் இந்த ஆண்டு ஆரவாரமின்றியும், இறுதிநாள் சாமிகளின் தசரா ஊர்வலமின்றியும் 11ஆம் அந்தந்த இடத்திலேயே சாமிகள் அலங்காரத்தில் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT