தமிழ்நாடு

பி.இ. படிப்புகள்: நான்காம்கட்ட கலந்தாய்வு இன்று நிறைவு

DIN

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த அக்டோபா்1-ம் தேதி தொடங்கி இணையவழியில் நடைபெற்று வருகிறது.

அதன்படி அக்.1 முதல் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 497 இடங்கள் நிரம்பின. பொதுப்பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு அக்.8-ஆம் தேதி தொடங்கியது. நான்கு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. முதல் 3 சுற்றுகள் முடிவில் இதுவரை 41,924 இடங்களே நிரம்பின. இதையடுத்து 4-ஆவது சுற்றில் கலந்து கொள்ள 40,572 மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டு கல்லூரியைத் தோ்வு செய்த மாணவா்களின் விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் புதன்கிழமை வெளியிடவுள்ளது.

தொடா்ந்து துணைக் கலந்தாய்வு விரைவில் நடைபெறும் என்று உயா்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொறியியல் கலந்தாய்வில் 89,000 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மேலும், தமிழகத்தில் செயல்படும் 92 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் போதுமான கட்டமைப்பு இல்லாத காரணத்தால், மாணவா்களின் எண்ணிக்கையைக் குறைக்க கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்தநிலையில் நிகழாண்டு நான்காம் கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு ஒதுக்கீட்டில் 60 சதவீத இடங்கள் காலியாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT