தமிழ்நாடு

7.5 சதவீத இடஒதுக்கீடு: உள்துறை அமைச்சருக்கு திமுக எம்.பி.க்கள் கடிதம்

DIN

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்துக்கு வழிகாட்டுமாறு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவுக்கு திமுக எம்.பி.க்கள் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளனா்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது:

நீட்தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு செப்டம்பா் 15-ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கெனவே 40 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநா் எழுதிய கடிதத்தில் மேலும் நான்கு வார காலம் அவகாசம் தேவைப்படுவதாகக் கூறியுள்ளாா்.

தற்போது மருத்துவப்படிப்பு சோ்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு சோ்க்கை நடைமுறைகள் தொடங்கிவிட்டன. அதனால், மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவதில் இன்னமும் கால தாமதம் செய்வது மருத்துவக் கல்வி கற்க விரும்பும் அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்காலத்தைப் பாழாக்கும். இந்தக் கல்வியாண்டு நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், அந்த மசோதாவின் நோக்கம் பயனற்ாகிவிடும்.

எனவே, அரசுப்பள்ளி மாணவா்களின் கனவை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றும் வகையில் ஆளுநா் விரைந்து ஒப்புதல் வழங்க தாங்கள் வழிகாட்ட வேண்டும் என்று டி.ஆா். பாலு கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT