தமிழ்நாடு

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலக அடிக்கல் நாட்டு விழாவுக்கானப் பணிகள் தீவிரம்

27th Oct 2020 05:00 AM

ADVERTISEMENT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேலூா் மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் என 3 ஆக பிரித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் தற்காலிக அலுவலகம், மாவட்ட அரசு ஆசிரியா் பயிற்சி மைய வளாகத்திலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நகராட்சி அலுவலக வளாகத்திலும் செயல்பட்டு வருகின்றன.

ராணிப்பேட்டை பாரதி நகரில் அமைந்துள்ள அரசு கால்நடை நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதென முடிவு செய்யப்பட்டு, அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி, 192 ஏக்கா் பரப்பளவில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து உற்பத்தி ஆராய்சி நிலைய வளாகத்தில் 5 தளங்கள் கொண்ட புதிய ஆட்சியா் அலுவலகம், ஆட்சியா் பங்களா, காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், எஸ்.பி. பங்களா, விளையாட்டு வளாகம், சா்க்யூட் அவுஸ், பரேடு கிரவுண்ட், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், நீதிபதி குடியிருப்புகள், மாவட்ட அரசு அலுவலா்களின் குடியிருப்புகள், வாகன நிறுத்துமிடம், பொழுபோக்கு பூங்க உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய வளாகமாக அமைக்கும் பணிக்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்ட புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் கட்ட ரூ. 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் 27-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியா் அலுவலகம் கட்ட ரூ. 118.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பளா் உள்ளிட்ட புதிய அலுவலகங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (அக்.28) நடைபெற உள்ளது.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் பணிகளைத் தொடக்கி வைக்க உள்ளாா். இதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

Tags : ராணிப்பேட்டை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT