தமிழ்நாடு

ஊத்தங்கரையில் மாமன்னர் மருதுபாண்டியர் குருபூஜை விழா

27th Oct 2020 04:49 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையார் நலச் சங்கம் சார்பில் முதல் இந்தியச் சுதந்திரப் போராட்ட  வீரர்கள் மாமன்னர் மருது பாண்டியர்களின் 219வது குருபூஜை விழா ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

முன்னதாக வண்டிக்காரன் கொட்டாய் தாண்டியப்பனூர், நாட்டாமை கொட்டாய் ஆகிய கிராமங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கு அகில இந்திய அகமுடையார் மகாசபை மாவட்ட தலைவர் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் ஆர். தர்மலிங்கம் தலைமை வகித்தார், தொழிலதிபர் கோபி, அகில இந்திய அகமுடையார் மகாசபை மாவட்டச் செயலாளர் கு.பழனி, துணைச் செயலாளர் திருவேங்கடம், மூத்த உறுப்பினர்கள் கங்காதரன், சுரேஷ், வண்டிக்காரன் கொட்டாய் ஊர் நாட்டாமை  தண்டபாணி, ஊர் கவுண்டர் சுப்பிரமணி, ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருது பாண்டியர்களின்  திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர், நிகழ்ச்சியில்  அகமுடையார் சங்க இளைஞர்கள் பூவரசன், மோகன், பிரவீன், கார்த்திக், முரளி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT