தமிழ்நாடு

நாகர்கோவிலில் பாஜக மகளிர் அணியினர் முற்றுகை போராட்டம்

27th Oct 2020 01:44 PM

ADVERTISEMENT

 

இந்து மத பெண்களை இழிவாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கைது செய்ய வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக மகளிர் அணியின் சார்பில் முற்றுகை போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இப்போராட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணியின் தலைவி மகேஸ்வரி முருகேசன் தலைமை வகித்தார். மாநிலச்செயலாளர் உமாரதிராஜன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். இதில் நாகர்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ், பாஜக மகளிர் அணியின் முன்னாள் தலைவி பிரியா உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திருமாவளவனைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். மேலும் ஆட்சியர் அலுவலக சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட 98 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT