தமிழ்நாடு

திருமாவளவனைக் கண்டித்து பாஜக மகளிர் அணியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

27th Oct 2020 12:26 PM

ADVERTISEMENT

 

பெண்களை இழிவாகப் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் பாஜக மகளிரணி மற்றும் பட்டியல் அணி சார்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சனாதன மனுதர்மம் நூல் தொடர்பாக திருமாவளவன் பெண்கள் குறித்த கருத்துகளைத் தவறாகச் சித்தரித்துப் பேசியதாக மகளிர் அணியினர் முழக்கங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மகளிர் அணித் தலைவி சத்ய பானு, நகர மகளிர் அணித் தலைவி இளவரசி, பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார், கல்வியாளர் பிரணவ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT